எம்பிலிபிட்டிய பகுதியின் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் பெற்றார் எனக் கூறி அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதான சாட்சியாளரான இலஞ்சம் கொடுத்ததாக கூறியவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 

கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னிடம் 15000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டார் எனக் கூறி கிராம சேவகர் ஒருவருக்கு எதிராக எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஆர்.எஸ். புன்னியதர்ஷன என்பவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அது தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இலஞ்சம் வழங்கியதாக கூறிய நபர் பிரதான சாட்சியாளர் என்ற ரீதியில் நேற்று சாட்சியமளித்தார். இதன்போது அவரது சாட்சியம் பொய்யானது என்பது நீதிபதிக்கு தெளிவான நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிராம சேவகரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் பொய்யான சாட்சியம் வழங்கி நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் சாட்சியாளரான புன்னியதர்ஷனவுக்கு 18 மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.