தேசிய திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த பிரகாஷ் ராஜ்

04 Nov, 2025 | 12:42 PM
image

பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், சமீபத்தில் வெளியான தேசிய திரைப்பட விருதுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி, “உள்ளடக்கமும் கலைமையும் இல்லாமல், பெயர் பிரபலமோ அல்லது அரசியல் ஆதரவோ உள்ள படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது:

“FILES, PILES, SMILES என்ற பெயரிலான படங்களுக்கே விருதுகள். இது சினிமா கலைக்கான மதிப்பா அல்லது அரசியல் அடிப்படையிலான விருதுகளா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்து தற்போது திரைப்படத்துறையிலும் இரசிகர்களிடையிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் பிரகாஷ் ராஜின் கருத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள், சிலர் தேசிய விருது குழுவை பாதுகாத்தும் வருகின்றனர்.

இதேவேளை, தேசிய திரைப்பட விருது குழுவின் சில உறுப்பினர்கள் “விருதுகள் முழுக்க தொழில்முறை மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன” என்று பதிலளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்