வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

04 Nov, 2025 | 11:51 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (03) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - மீரிகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படல்கமவிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற லொரி, எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதன்போது, விபத்தில் காயமடைந்த லொரியின் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் அகரகம மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொரியில் பயணித்த பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திவுல்தெனிய பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம்,  பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடஹில்ல பகுதியில், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது பலத்த காயமடைந்து பெண், சிகிச்சைகளுக்காக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில், உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய நகுலுகமுவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை-மட்டக்களப்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நிகவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மதவாச்சி ஏ-09 வீதியின் 149வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் அனுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்து வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ரம்பெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முருங்கன் - பரிஹரிக்கண்டல் பகுதியில், சிலாவத்துர நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் சிகிச்சைக்காக முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சிலாவத்துர பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, முருங்கன்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47
news-image

கஹட்டகஸ்திகிலியவில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது !

2026-08-09 16:28:07
news-image

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை...

2026-08-09 16:23:41
news-image

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

2026-08-09 16:27:28