புட்டபர்த்தி சாய்பாபாவின் புகழைப் போற்றும் 'அனந்தா '

03 Nov, 2025 | 06:28 PM
image

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான சாய்பாபாவின் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரின் புகழைப் பாடும் திரைப்படமாக 'அனந்தா 'உருவாகிறது என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் பக்தி உணர்வுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் 'அனந்தா' எனும் திரைப்படத்திற்கு பி. எல். சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, 'தேனிசை தென்றல் 'தேவா இசையமைக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறையும், அவருடைய ஆன்மீக பயணங்களையும் பின்னணியாக கொண்டு தயாராகும் இந்த திரைப்படத்தை இன்னர் வியூ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கிறார்.

தமிழ் -தெலுங்கு -இந்தி ஆகிய மொழியில் தயாராகும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. புட்டபர்த்தி சாய்பாபாவின் ஜெயந்தி தினமான எதிர்வரும் 23 ஆம் திகதியன்று படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தெலுங்கு -கன்னடம்- இந்தி - திரையுலகில் ஆன்மீக சார்ந்த படைப்புகளுக்கு கிடைத்து வரும் பிரம்மாண்டமான வரவேற்பை முன்னிட்டு... புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமைகளும், அவர் நிகழ்த்திய அற்புதங்களும் இப்படத்தில் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்