அறிமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி 2' படத்தின் முதல் பாடல் வெளியீடு

03 Nov, 2025 | 06:25 PM
image

புதுமுக நடிகர் மதி கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'கும்கி 2 'படத்தில் இடம்பெற்ற 'பொத்தி பொத்தி' எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2' எனும் திரைப்படத்தில் மதி, ஷிரிதா ராவ், அர்ஜுன் தாஸ் ,ஹரிஷ் பெராடி, சூசன் ஜார்ஜ், ஸ்ரீநாத் , ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். யானைக்கும், ஒரு இளைஞனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தவல் காடா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டோக்டர் ஜெயந்தி லால் காடா வழங்குகிறார்.

எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இடம்பெற்ற 'பொத்தி பொத்தி உன்ன வெச்சு..'  என தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன்ராஜ் எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான நிவாஸ் கே. பிரசன்னா பாடியிருக்கிறார். ஒரே பாடலில் மூன்று வெவ்வேறு இசை வடிவத்தை திறமையாக இடம்பெறச் செய்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தப் பாடல் தொடர்ந்து இசைத் தளங்களில் முன்னணி இடத்தை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்