இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'டி சி ' ( D C) படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

03 Nov, 2025 | 06:22 PM
image

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ', 'கூலி' ஆகிய படங்களை இயக்கிய முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'டி சி' ( D C) என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'டி சி' எனும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி. முகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கொமர்சல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தாலும், :இனிமேல்' எனும் சுயாதீன இசை அல்பத்தில் தோன்றியிருந்தாலும், 'டி சி :எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இதற்கான டைட்டிலை படக்குழுவினர் அறிவிப்பதற்காக வெளியிட்ட பிரத்யேக காணொளியில் தேவதாஸ் எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனும், சந்திரா எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியும் தோன்றுவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்களது பெயரின் ஆங்கில முதல் எழுத்தான' டி சி' ( D C)யை படத்தின் டைட்டிலாக்கி இருக்கிறார்கள். அவர்கள் எம்மாதிரியான கதாபாத்திரத்தில் திரையில் தோன்றுகிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பதால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்