நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் '45' படத்தின் அப்டேட்

03 Nov, 2025 | 06:19 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான டொக்டர் சிவராஜ் குமார் - உபேந்திரா- ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்' 45 ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அஃப்ரோடபாங்' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளரும், இயக்குநருமான அர்ஜுன் ஜென்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '45 'எனும் திரைப்படத்தில் டொக்டர் சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி, ஜிஸ்ஸு சென் குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூரஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'அஜிலி குஜிலி மஜா ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடலாசிரியர் கானா காதர் எழுத, பின்னணி பாடகரான கானா காதர் பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான காட்சிகள்- நடனங்கள் - உடையலங்காரங்கள்- அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்