இயக்குநரும், நடிகருமான சேரன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஆட்டோகிராப்'. தேசிய விருதினை வென்ற இந்த திரைப்படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது.
இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவான 'ஆட்டோகிராப்' எனும் திரைப்படத்தில் சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவிவர்மன்- விஜய் மில்டன் -துவாரகநாத் - ஷங்கி மகேந்திரன் - ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத்வாஜ் - சபேஷ் & முரளி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது கடந்த தசாப்தங்களில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில் சேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படமும் இடம்பெற்றிருக்கிறது. பொருத்தமான வாய்ப்புகள் இல்லாமல் சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் இயக்குநர் சேரனுக்கு அவருடைய வெற்றி படமான 'ஆட்டோகிராப்' மீண்டும் வெளியாகி, இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்து வெற்றியைப் பெற்றால்.. மீண்டும் அவர் திரைப்படங்களை இயக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM