மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய உதவும் நவீன பரிசோதனை

03 Nov, 2025 | 05:30 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடை முறையையும், உணவு முறையையும் முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இதயம் சார்ந்த பாதிப்பினை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள்.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா ?இல்லையா? என்பதனை துல்லியமாக அவதானிக்க நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி இருப்பதாக இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பலரும் நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு ஏற்பட்ட பிறகே உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று அவசர மற்றும் தீவிர சிகிச்சையைப் பெறுகிறார்கள்.

இந்நிலையில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதனை சி டி ஸ்கேன் கால்சியம் ஸ்கோரிங் எனும் எளிய பரிசோதனை மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே கண்டறிய முடியும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பாரம்பரிய இதய பாதிப்புள்ள குடும்ப வரலாறை கொண்டவர்கள்-  புகையிலை பாவனை கொண்டவர்கள் - அதீத கொலஸ்ட்ரால் பாதிப்புள்ளவர்கள் - இயல்பான எடையை விட கூடுதல் எடையை கொண்டவர்கள்-  உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்பவர்கள்- நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் - ஆகியோர்களுக்கு அறிகுறி அல்லது அறிகுறியற்ற வகையினதான மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இந்நிலையில் இவர்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னரே அத்தகைய பாதிப்பிற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை மேலே விவரிக்கப்பட்ட சிடி ஸ்கேன் கால்சியம் ஸ்கோரிங் எனும் எளிய பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். 

இத்தகைய பரிசோதனையின் போது நோயாளிகளை சி டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வார்கள். அதில் உங்களுடைய இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான மூன்று கொரனரி இதய ரத்த நாளங்களில் கால்சியம் அல்லது கொழுப்பு போன்ற படிவங்கள் படிந்து இருக்கிறதா..? என்பதையும், இவை நாளடைவில் குருதி ஓட்டத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துமா? என்பதையும் இதன் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம். பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் வைத்தியர்கள் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை -உடற்பயிற்சி -உணவு கட்டுப்பாடு -நடைபயிற்சி -வாழ்க்கை நடைமுறை மாற்றம் -ஆகியவற்றை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ பரிந்துரைப்பார்கள். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படாமல் இதய ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் ஆனந்த் குமார் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11
news-image

பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா...

2026-06-29 16:50:27
news-image

திடீர் காது கேளாமை பாதிப்பிற்கான நவீன...

2026-06-26 16:17:41