ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

03 Nov, 2025 | 05:27 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும்  நாளாந்தம் எதிர்பாராத வகையில் பல சங்கடங்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கிறார்கள். அதன் காரணமாக பொருளாதார ரீதியில் பற்றாக்குறை என்பது அதிகரிக்கிறது.

இந்த தருணத்தில் இவர்கள் தங்களின் பூர்வ புண்ணியம் குறைவாக இருப்பதாலும்... அவை சுப தன்மையிலிருந்து விலகி அசுப நிலையில் இருப்பதாலும் தான் இத்தகைய எதிர்பாராத கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அதற்கு மாற்றாக விதியையும், விதியை அருளிய இறைவன் மீதும் குற்றத்தை சுமத்துவார்கள். இந்த நிலையில் இவர்கள் தங்களுக்கான ராஜ யோகத்தை பெறுவதற்கு சில சூட்சமமான வழிபாடுகள் உண்டு என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : வெள்ளை எருக்கம் பூ இலை - மஞ்சள்- குங்குமம்- பச்சரிசி- அகல் விளக்கு -பசு நெய்- பஞ்சு திரி.

எதிர்வரும் ஐப்பசி பவுர்ணமி நாளன்று அதாவது நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அன்று மாலை ஆறு மணிக்கு மேல் பௌர்ணமி திதி நிறைவடையும் தருணம் வரை உங்களது வீட்டின் பூஜையறையில் வெள்ளை எருக்கம் பூ பூக்கும் இலையை பறித்து, அதனை சுத்தப்படுத்தி, அதன் மீது மஞ்சளையும், குங்குமத்தையும் பூச வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சிறிதளவு அட்சதை எனப்படும் மஞ்சள் கலந்த பச்சரிசியை வைத்திட வேண்டும். இதனைத் தொடர்ந்து அந்த இலை மீது அகல் விளக்கை வைத்து, அதில் பசு நெய்யையும், பஞ்சு திரியும் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு உங்களுடைய முன்னோர்களை நினைத்தும்... சிவபெருமானை நினைத்தும் ... சந்திர பகவானை நினைத்தும் ...எம்முடைய இந்த பிறவியில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, நாளாந்தம் தன வருவாய் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை பௌர்ணமி திதி நிறைவடையும் நேரமான எட்டு மணி வரை ஒளிர விடுங்கள். அதன் பிறகு தீபத்தை குளிர்விக்கலாம். இந்த பிரார்த்தனையை நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களுக்கு சுபமான பலன்கள் கிடைப்பதை உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-11-08 18:14:04
news-image

இல்லங்களில் தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சம...

2025-11-07 17:21:54
news-image

கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-06 16:54:52
news-image

செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-04 18:22:32
news-image

ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

2025-11-03 17:27:01
news-image

2025 நவம்பர் மாத ராசி பலன்கள்

2025-11-02 10:17:00
news-image

வறுமையை நீக்கி செல்வ வளத்தை உண்டாக்கும்...

2025-11-01 15:17:56
news-image

காணி மீதான தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக...

2025-10-31 16:11:01
news-image

வெற்றிகளை அள்ளித் தரும் சூட்சும வழிபாடு..!?

2025-10-30 17:25:01
news-image

பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-10-29 18:24:49
news-image

மறுமணம் நடைபெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-10-28 16:41:56
news-image

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கான வாழ்வியல் குறிப்பு..!?

2025-10-27 15:14:26