( தலவாக்கலை நிருபர் )
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான 150 x 78 சதுர அடி பரப்புள்ள சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை (03) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தினால் பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு கொடுத்த போதிலும் கேட்போர் கூடத்தை நிர்மாணிக்காது கைவிட்டு சென்றமைக்காக, மேல் கொத்மல நீர்மின் திட்டம் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு எதிராக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு பாலமுரளி மற்றும் உறுப்பினர்களான விஜயகுமார். அன்பழகன். பாரிஸ் ஆகிய 4 பேர் சேர்ந்து உயர் நீதிமன்றில் தொடுத்த வழக்கில் கிடைத்த தீர்ப்புகளின் பிரகாரம், இலங்கை மின்சார சபை இந்த பாடசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 27 கோடி ரூபாய் செலவில் கேட்போர் கூடத்தை நிர்மாணிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி .ரோகிணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. கிருஷ்ணசாமி . ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வானது இந்து மத கலாச்சாரத்தின் அடிப்படையில் சமய அனுஷ்டானங்கள் மற்றும் பூஜைகள் இடம் பெற்றதன் பிறகு உத்தியோகபூர்வமாக கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது இதில் பாடசாலையின் முன்னாள் தற்போதைய அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் அடிக்கல் நாட்டி வைத்தனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM