Singer - MCA சுப்பர் பிறீமியர் லீக் கிரிக்கெட் : மெலிபன் பிஸ்கட்ஸ் நொக் அவுட் சம்பியனானது

03 Nov, 2025 | 04:56 PM
image

(நெவில் அன்தனி)

கலம்போ கிரிக்கெட் கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சிங்கர் - எம் சி ஏ சுப்பர் பிறீமியர் லீக் 50 ஓவர் நொக் அவுட் இறதிப் போட்டியில் (பகல் - இரவு) ஹேலிஸ் குழுமம் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்ட மெலிபன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஹேலிஸ் குழுமம் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்தது.

நிஷான் மதுஷ்க (40), ரொன் சந்த்ரகுப்தா (55) ஆகிய இருவரும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தமை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

இனுக்க கரன்னாகொட (26), அஹான் விக்ரமசிங்க (28), ரவிந்து பெர்னாண்டோ (27), ரமேஷ் மெண்டிஸ் (22) ஆகிய நால்வரும் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெலிபன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் 46.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தனஞ்சய லக்ஷான், மிலிந்த சிறிவர்தன ஆகிய இருவரும் தலா 41 ஓட்டங்களையும் துஷான் விமுக்தி 37 ஓட்டங்களையும் சங்கீத் குறே 33 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கவிஷ்க அஞ்சுல 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09
news-image

மகளிர் பிறீமியர் லீக் 2026 :...

2025-11-06 13:26:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 15:39:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 13:59:12