(நெவில் அன்தனி)
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தின் (Central Asian Volleyball Association - CAVA) அழைப்பின் பேரில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பமாகவுள்ளது
இந்த சம்பியன்ஷிப்பில் கிர்கிஸ்தான், மாலைத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய 4 நாடுகள் பங்குபற்றுகின்றன.
19 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான ஆரம்ப விழா பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன தலைமையில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆரம்பப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி எதிர்த்தாடும்.
அப் போட்டியைத் தொடர்ந்து கிர்கிஸ்தான் அணியை நேபாள அணி சந்திக்கும்.
இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி 5ஆம் திகதி புதன்கிழமை 4.30 மணிக்கும் இலங்கைக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையிலான போட்டி 6ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கும் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை 7ஆம் திகதி ஓய்வு வழங்கப்பட்டு சனிக்கிழமை 8ஆம் திகதி அரை இறுதிப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் திகதி 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியும் நடைபெறும்.
இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு வைபவத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
இந்தப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர் சீதுவ தெவிசமர வித்தியாலயத்தில் தங்குமுகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
அணி விபரம்:
சுலக்ஷனா பசிந்துனி (தலைவி), ஹிருணி ப்ரபோதா, ஹர்ஷனி நிசன்சலா, பவனி பபசரா, டஷனி பாக்யா, அப்சரா நெத்மினி, விஹங்கி அஹின்சா, வத்ஷிகா தில்ஷானி, நெத்மி திவ்யாஞ்சலி, நெத்யா மிந்துலி, ஜினேஷி மதுஷானி.
தலைமைப் பயிற்றுநர்: சார்ள்ஸ் திலக்கரட்ன, உதவிப் பயிற்றுநர்: உதய ருக்மால், உடற்பயிற்சி ஆலோசகர்: திலங்க ருஷான் ஜயக்கொடி, அணி முகாமையாளர்: சமிந்த லக்ஷ்மன், பெண் பொறுப்பதிகாரி: நதீக்கா சந்தமாலி.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM