ஓடிக் கொண்டிருந்த காரின் கதவுகள் திறந்துக் கொண்டதால், உள்ளே இருந்த குழந்தை கீழே விழுந்து மயிரிழையில் கார் சக்கரத்தில் சிக்குவதிலிருந்து தப்பிய அதிசய சம்பவம் தாய்­லாந்தின் பேங்காக் நகரிலுள்ள மின்யூரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் வாகன நெரிசலில் நின்றுக் கொண்டிருந்த கார் நகரத் தொடக்கிய போது காரின் முன் இருக்கைக் கதவு திறந்து கொண்டு, குழந்தை ஒன்று வீதியில் விழுந்துள்ளது. 

குறித்த கார் நகர்ந்துக் கொண்டே இருக்க, அக்குழந்தை பின்புற சக்கரத்தில் சிக்கும் அபாயகரமான நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உருண்டு நகர்ந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது. 

 கீழே விழுந்து எழுந்த குழந்தை நகர்ந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓட்டியது பின்னர் அந்தக் காருக்குள் இருந்த பெண்,  அந்தக் குழந்தையை தூக்கியெடுத்து கொண்ட பின்னர் கார் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பின்புறக் காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பாதிவாகியுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, தனது கெமராவை தாம் சரிவர செயல்பட வைக்காததால் அதிலுள்ள திகதியும் நேரமும் மாறி இருப்பதாகவும் இந்தச் சம்பவம் திங்களன்று இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.