ஆப்கானிஸ்தானில் திங்கட்கிழமை ( நவம்பர் 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 320 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான மாகாணமான சமங்கன் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுமார் 5.23 இலட்சம் மக்கள் வசிக்கும் மஜார்-இ-ஷெரீப் (Mazar-i-Sharif) நகரின் அருகே இது மையம் கொண்டிருந்தது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இருள் சூழ்ந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் உடனடியாகத் தப்பிச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பலமாக குலுங்கின.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் அமைப்பு (USGS) இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிவப்பு நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், இராணுவத்தின் மீட்பு மற்றும் அவசரகால உதவி குழுக்கள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 320 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM