(நெவில் அன்தனி)
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இந்த வருடம் நடத்தப்பட்ட 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தெஹியோவிட்ட, தெபேகம ரன்தரு விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் மஹாஉஸ்வெவ ரத்தனபால விளையாட்டுக் கழகமும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.
கடந்த காலங்களில் பகிரங்க போட்டிகளாக நடத்தப்பட்டுவந்த இரு பாலாருக்குமான இப் போட்டி இந்த வருடம் 25 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டது.
சிறந்த தேசிய வீரர்களை உருவாக்கும் நோக்குடனேயே இந்த வருடம் ஜனாதிபதி கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னோடி சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.

ஐந்து செட்கள் நீடித்ததும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியதுமான ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ருவன்வெல்ல ராஜசிங்க விளையாட்டுக் கழகத்தை 3 - 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் ரன்தரு விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டு சம்பியனானது.
முதல் இரண்டு செட்களில் ரன்தரு விளையாட்டுக் கழகம் முறையே 25 - 18, 26 - 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், அடுத்த இரண்டு செட்களில் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய ராஜசிங்க விளையாட்டுக் கழகம் 25 - 21, 25 - 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 2 - 2 என சமப்படுத்தியது.
தீர்மானம் மிக்க கடைசி செட்டை 15 - 13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தனதாக்கிய ரன்தரு விளையாட்டுக் கழகம் 3 - 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது.
ரத்தனபால சம்பியன்
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மாஹோ விஜயபா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய ரத்தனபால விளையாட்டுக் கழகம் 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் கடும் சவாலுக்கு மத்தியில் 25 - 21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற ரத்தனபால விளையாட்டுக் கழகம், இரண்டாவது செட்டில் 25 - 17 என சற்று இலகுவாக வெற்றிபெற்று 2 செட்கள் முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது செட்டில் பதிலடி கொடுத்த விஜயபா விளையாட்டுக் கழகம் 25 - 15 என இலகுவாக வெற்றிபெற்று போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

நான்காவது செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தது. எனினும் கடைசிக் கட்டத்தில் விஜயபா கழகம் தவறுகளை இழைத்ததால் ரத்தனபால கழகம் 25 - 23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
சிறந்த பக்கவாட்டு வீர, வீராங்கனைகள், மத்திய வீர, வீராங்கனைகள், சிறந்த செட்டர்கள், சிறந்த லிபெரோக்கள் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு விசேட விருதுகள் வழங்கப்பட்டது.


ஆண்கள் பிரிவில் பெறுமதி வாய்ந்த வீரர் விருதை ரன்தரு வீரர் எஸ். ஆர். ஜே. திசாநாயக்கவும் பெண்கள் பிரிவில் பெறுமதி வாய்ந்த வீராங்கனை விருதை ரத்தனபால வீராங்கனை ப்ரீத்திக்கா ப்ரபோதனியும் வென்றெடுத்தனர்.
பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெரும ஆகியோர் பிரதான பரிசில்களை வழங்கினர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM