ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; 07 பேர் பலி ; 150 பேர் காயம்

Published By: Digital Desk 3

03 Nov, 2025 | 10:22 AM
image

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குல்மிலிருந்து மேற்கு-தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் 28 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளிர் ஆப்கானிஸ்தான் பல கொடிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. 

பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 6.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது, 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் வலுவான பின்அதிர்வுகள் குறைந்தது 4,000 உயிர்களைக் கொன்றதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், அதிகாரிகள் பின் அதிர்வுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய சேதங்களை கண்காணித்து வருவதாகவும் ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி...

2026-04-21 14:37:03
news-image

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை செயலாளர் லோரி...

2026-04-21 12:59:32
news-image

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை நீக்கம்; மேலும்...

2026-04-21 10:30:51
news-image

மிரட்டல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது...

2026-04-21 10:37:31
news-image

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திட்டமில்லை...

2026-04-21 09:35:16
news-image

ஈரானுடன் போர் தொடுக்க இஸ்ரேல் தன்னைத்...

2026-04-21 05:07:36
news-image

ஜம்மு - காஷ்மீர் மலையில் பேருந்து...

2026-04-21 03:47:59
news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13