(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார்.
தனது 131ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பாபர் அஸாம் 4302 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் ஷர்மா 159 போட்டிகளில் பெற்ற 4231 மொத்த ஓட்டங்கள் என்ற சாதனையை இதன் மூலம் பாபர் அஸாம் முறியடித்தார்.
இந்தியாவின் மற்றொரு முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி 125 போட்டிகளில் 4231 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2023 ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா சம்பியனான சூட்டோடு சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றனர்.
இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 34 ஓட்டங்களையும் கோபின் பொஷ் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் டொனவன் ஃபெரெய்ரா 29 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரவிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உஸ்மான் தாரிக் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதில் பாபர் அஸாம் 68 ஓட்டங்களையும் அணித் தலைவர் சல்மான் அகா 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.
பந்துவீச்சில் கோபின் பொஷ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லிஸாட் வில்லியம்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: பாபர் அஸாம், தொடர்நாயகன்: பாஹீம் அஷ்ரப்.
இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 55 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM