தென் ஆபிரிக்காவை சிதறடித்தனர் வர்மா, ஷர்மா; இந்தியா முதல் தடவையாக மகளிர் உலக சம்பியனாகி வரலாறு படைத்தது

Published By: Vishnu

03 Nov, 2025 | 12:56 AM
image

(நெவில் அன்தனி)

நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து 52 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது.

சொந்த மண்ணில் உலக சம்பியனான இந்திய அணியினர், தமது தேசத்தின் 100 கோடி மக்களின், கிரிக்கெட் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி பேரானந்தத்தில் மூழ்கினர்.

மகளிருக்கான இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா சம்பியனானது இதுவே முதல் தடவையாகும்.

இதன் மூலம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளைத் தொடர்ந்து இம் முறை புதிய அணியாக இந்தியா உலக சம்பியனானது.

2005இல் அவுஸ்திரேலியாவிடமும் 2017இல் இங்கிலாந்திடமும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் அடைந்த தோல்விகளை இந்த வெற்றி மூலம் இந்தியா நிவர்த்தி செய்துகொண்டது.

ஷபாலி வர்மா (87 ஓட்டங்கள், 2 விக்கெட்கள், தீப்தி ஷரமா (58 ஓட்டங்கள், 5 விக்கெட்கள்) ஆகிய இருவரின் அபார சகலதுறை ஆட்டங்கள் தென் ஆபிரிக்கா உலகக் கிண்ண கனவை சிதறடிக்கச் செய்து இந்தியாவை வெற்றி அடையச் செய்தன. அவர்கள் இருவரைத் தவிர ஸ்ம்ரித்தி மந்தனா மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்.

சிரற்ற காலநிலை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்ம்ரித்தி மந்தனா (45), ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் இந்தியா சார்பாக சிறப்பான இணைப்பாட்டங்கள் பதிவாகவில்லை.

மத்திய வரிசையில் தீப்தி ஷர்மா (58), ரிச்சா கோஷ் (34) ஆகியோரும் முன்வரிசையில் ஜெமிமா ரொட்றிக்ஸ் (24). ஹாமன்ப்ரீத் கோர் (20) ஆகியோரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ணத்தை தவறவிட்டது.

அணித் தலைவி லோரா வுல்வார்ட் தனி ஒருவராகப் போராடி அபார சதம் குவித்த போதிலும் அது பலனற்றுப் போனது.

இந்த உலகக் கிண்ணத்தில் அவர் குவித்த 2ஆவது தொடர்ச்சியான சதம் இதுவாகும்.

எனினும், ஏனைய வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது தென் ஆபிரிக்காவுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

லோரா வுல்வார்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 101 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அவருக்கு அடுத்ததாக ஆன்ரீ டேர்க்சன் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட சுனே லுஸ் (25), தஸ்மின் ப்ரிட்ஸ் (23) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஷபாலி வர்மா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஷபாலி வர்மா, தொடர் நாயகி: தீப்தி ஷர்மா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 02:31:08
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19
news-image

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான்...

2025-11-14 12:36:16
news-image

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள...

2025-11-13 19:51:15
news-image

தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்...

2025-11-13 18:47:21
news-image

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினரின் உயிர்பாதுபாப்பு...

2025-11-13 17:17:18
news-image

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதே வர்த்தக கிரிக்கெட்...

2025-11-13 16:20:06