(நெவில் அன்தனி)
எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தில் ஆயிலை வெற்றிபெற்றார்.
தட்டெறிதல் போட்டியில் பொன்சேகா 23.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் மாணவி எஸ். அந்த்ரியானா 23.34 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்பபடும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டிக்கு ரிட்ஸ்பறி அனுசரணை வழங்குகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM