மகளிர் ஐசிசி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு இந்தியா  நிர்ணயித்த வெற்றி இலக்கு 299

Published By: Vishnu

02 Nov, 2025 | 08:48 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுவரும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு 299 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

சிரற்ற காலநிலை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.

இப் போட்டி 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமானபோதிலும் கட் ஓவ் டைம் பிரகாரம் ஒவர்கள் குறைக்கப்படாமல் 50 ஓவர் போட்டியாக நடத்தப்படுகிறது.

ஷபாலி வர்மா, தீப்தி ஷரமா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தன.

ஸ்ம்ரித்தி மந்தனா (45), ஷபாலி வர்மா (87) ஆகிய இருவரும் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் இந்தியா சார்பாக சிறப்பான இணைப்பாட்டங்கள் பதிவாகாத போதிலும் மற்றைய வீராங்கனைகள் தங்களால் முடிந்த அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

மத்திய வரிசையில் தீப்தி ஷர்மா (58), ரிச்சா கோஷ் (34) ஆகியோரும் முன்வரிசையில் ஜெமிமா ரொட்றிக்ஸ் (24). ஹாமன்ப்ரீத் கோர் (20) ஆகியோரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தென் ஆபிரிக்கா சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58