அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை ; திலித் ஜயவீர

03 Nov, 2025 | 07:20 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர  தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் அனைத்து கொள்கைத் திட்டங்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. கடந்த அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டதோ அதே வகையில் தான் இந்த அரசாங்கமும் செயற்படுகிறது.

பெற்றுக் கொண்ட அரசமுறை கடன்களை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இந்த அரசாங்கமும் கடன் பெறுவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லை.எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளார்கள். 

இந்த பேரணியில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகளிடம் உறுதியான கொள்கை கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22