நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி  இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

நூல் சுற்றும் இயந்திரமொன்றில் நூல் சிக்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதை சரி செய்வதற்காக சென்ற வேளையிலேயே குறித்த இளைஞரின் உடலானது நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்குண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கேகாலையைச் சேர்ந்த சாமி சோமிய பாலித எனும் 35 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.