வறுமை நிலையில் உள்ள இளம்பெண்கள் மற்றும் அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்த பெண்கள் ஆகியோரை குறிவைத்து காமவேட்டையை நடத்திய டேனியலுக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிலா(29). கடந்த 2013-ம் ஆண்டு அந்நகரில் பொலிஸ்காரராக பணியில் சேர்ந்த இவர் தனது பதவியைக்காட்டி, மிரட்டி, பயமுறுத்தி 4 பெண்களை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட டேனியலுக்கு எதிராக ஒக்லஹோமா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, டேனியல் ஹோல்ட்ஸ்கிலாவுக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.