இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 3 நாட்களாக  மீன்பிடி படகில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த  6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைக்கு மீட்டு வந்துள்ளனர்.

” தினு புதா1 “ எனப்படும் குறித்த மீனவப்படகானது கடந்த மாதம் 21 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

புறப்பட்டு ஏறத்தாழ 240 கடல் மைல் தொலைவில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகு 6 மீனவர்களோடு கடலில் தத்தளித்துள்ளது.

மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து நிலையை ஹம்பாந்தோட்டை கடற்படைக்கு தெரிவிக்க மீட்பு பணிகளுக்காக சாகர கப்பலில் கடற்படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து ஆபத்தில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவிகளை வழங்கியதோடு அவர்களை கரை சேர்த்துள்ளனர்.