புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

01 Nov, 2025 | 05:23 PM
image

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது 30,000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04