திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா.
நின்னவர் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய் மறைநான்கு மானாய் ஆறங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை என்னனாய் என்னனாய் என்னி எல்லால் ஏழையேன் ஏன்சொல்லி யேத்துகேனே.
திருக்கயிலாய பரம்பரை, திருநந்திமரபு, மெய்கண்டசந்தானம், சிவஞானசித்திநெறி, துறவறம், சித்தாந்த சைவஞான சுவாதீனமாய் திருச்சடாமகுடம் தாங்கி திருந்திய செங்கோல் செலுத்தி அருளாட்சி நடத்திவரும் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நடுநாடுதிருஎருக்கத்தம்புலியூரில் சர்வசித்து வருடம் ஐப்பசி -1 (17.10.1965) ஞாயிறு கூடிய சுபநாளில் மறைஞானசம்பந்தம் பிள்ளை, அலர்மேலு மங்கை அம்மை தம்பதிகளுக்கு முத்த தவப்புதல்வராய் அவதரித்தவர்கள்.
வேல்முருகன் என்பது பிள்ளைத் திருநாமம், சிறுவயதில் வளையமாதேவியில் வளர்ந்து, சீர்காழியில் கல்வி பயின்று, தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளுக்கு சற்பாத்திரராசி 23 ஆம் வயதில் துறவறம் ஏற்று, ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் எனும் திருநாமம் பூண்டு,மூவகை தீட்சைகளும் பெற்றவர்கள்.
தம்பிரான்களில் முதலில் "முனைவர் "பட்டம் பெற்று ஸ்ரீ காசிமடத்தின் கார்பாராக நிர்வாகம் மேற்கொண்டவர்கள். பழுத்தத் தமிழ்ப் புலமையால் பிரபந்தம் பல இயற்றியருளியவர்கள். எதையும் நயம்பட உரைக்கும் நாவன்மையும், சொற்றிறம்பாத கொள்கையும் உடையவர்கள், காசியில் கர்ப்பவாசம் செய்தவர்கள்.
நான்கு முறை திருக்கயிலையை தரிசித்தவர்கள். ஆதீனத்தின் பிரதிநிதியாக 50க்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்கள். திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மௌனமடம், சென்னை சமயப்பிரச்சார நிலையம், திருவையாறு தேவஸ்தானம் போன்ற பல இடங்களில் தலைமை பொறுப்புகள் வசித்து அரிய பெரிய திருப்பணி பல ஆற்றியவர்கள்.
தமக்குப் பின் ஆதீன கர்த்தர் "உலகம் சுற்றிய தமிழன் குமாரசாமி தம்பிரானுக்கு உரியது" என்று 26 ஆவது குருமணிகள் உயில் சாசனம் எழுதியும் 02.02.2017 நாளன்று இவர்களுக்கு தம் திருக்கரங்களால் ஞானஅபிஷேகம் செய்து இளைய சந்நிதானமாக பட்டம் சூட்டினார்கள்.
26 ஆவது குருமணிகளின் அவதார இல்லத்தை பெருந்திருக்கோயிலாக ஆக்கினார்கள். அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டினை தம்பிரானாக இருந்து 4 ஆவது மாநாடும், சின்ன பண்டாரசந்நிதியாக வீற்றிருந்து 5ஆவது மாநாடும் மகாசந்நிதானமாக எழுந்தருளி 6 ஆவது மாநாட்டையும் பார்புகழும் வண்ணம் நடத்தியவர்கள்.
13.12.2019 இல் ஞானபீடம் ஏற்றருளியது முதல் 5 ஆண்டுகளில் ஓய்வறியாமல் உழைத்துத் தருமை ஆதீன 27 தேவஸ்தானங்களுக்கும் திருப்பணி. 120 உபகோயில்களுக்கும் உடனாகத் திருப்பணி, வெளிக்கோயில்களுக்கும் ஆவனவற்றைச் செய்தும் 500 திருக்கோயில்களுக்கு முகூர்த்தம் தோறும் குடமுழுக்கினை நானிலம் போற்றும் வண்ணம் நடத்திக் காட்டியவர்கள்.
அந்நிகழ்வுகளில் சைவாதீனங்கள், மடாதிபதிகள், மத்திய மாநில அரசின் பிரதிநிதிகள் முதல் உலகளாவிய பிரபலமானவர்கள் வரை ஆன்றோர் பலரும். பங்கேற்று சிறபித்துள்ளமை இவர்களின் தண்ணளிச் சிறப்பும் தனித்துவமுமாகும்.
300 பவுன் பொற்பதக்கக் கலாநிதி விருதுகளை தம்திருக்கரங்களால் வழங்கி பல்துறை அறிஞர்களை ஆதரித்து ஊக்குவித்து வருகிறார்கள்.கற்றளிகள், தேர்,வெள்ளிரதம், வாகனம், கொடிமரங்கள். திருவாபரணங்கள் என்று முன்புள்ளவற்றை திருத்தியும், புதியதாகச் செய்தும் அர்ப்பணித்துள்ளார்கள்.
ஆதீனக் கட்டளை மடங்களில் முன்பிருந்ததை பொலிவித்தும், திரும்பும் திசையெங்கும் ஆதீனம் விளக்கமுற இமசேது பரியந்தம் புதியதாக இடம் வாங்கிப் பெரும்பொருட் செலவில் 40 கிளைமடங்களை நிறுவி தர்மபரிபாலனம் செய்து வருகிறார்கள். தம்பிரான் சுவாமிகள்
தங்கும் அறைகள், அலுவலகம், சிப்பந்திகுடியிருப்புகள், கடைத் தொகுதிகள். மண்டபங்கள் பல கட்டி நிர்வாகம் மேம்படச்செய்துவருகிறார்கள்.
சீர்காழி தேவஸ்தான திருப்பணியின்போது அரிய திருமுறைச் செப்பேடுகள் கண்டருளியவர்கள், ஒருகோடிமுறை பதிகம் ஓதிட இருகோடிமுறை பஞ்சாட்சரம் எழுதி, 11 லட்சம் முறை ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்திட ஆணையிட்டும் தாமே முன் நின்று நிறைவேற்றியவர்கள்.
மணிவிழா ஆண்டில் திருத்தல வழிபாடாற்ற 27 நாளில் நாடு,நகரம், கிராமம்,வயல்,வனம்,கடல்,மலை,வானம் என்று 7000 கி.மீ பயணம் மேற்கொண்டு பாடல்பெற்றதலம்,வைப்புத்தலம் 450 தையும் ஒரே சுற்றில் தரிசித்தும், ஆறு மாதங்களில் சிற்றூர் ஆலயமாக 1008 தரிசித்தும், மானோசரோவர் முதல் மாமகம் வரை, குடகுமுதல் குமரிவரை ஆயிரமாயிரம் தீர்த்தங்களில் சென்றாடிய புண்ணியச் சீலர். 121சிவாலயங்களில் ருத்ராபிஷேகம் செய்து பழைய வைதிக சைவம் தழைக்க அருள்சுரந்து வருகிறார்கள்.
ஆன்மீகப் பயணமாக ஐந்து ஆண்டுகளில் லட்சம் மையில்கள் பயணம், சுமார் 50000 கி.மீ இரத யாத்திரை, 1000 கி.மீ பாதயாத்திரை சென்ற ஒரே துறவி, இமயகேதாரம் பயணம் 20 மணி நேரத்தில் சென்றுவந்தவர்கள். ஒரு நாள் பயணமாக வட மாநிலங்களுக்கும், தெற்கு ஆசிய நாடுகளுக்கும் விமான பயணம் செய்தவர்கள்.
இவ்வளவு பயணத்திலும் ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கநாதர் நித்திய பூஜையினை வழுவறச் செய்பவர்கள், சமயமும் தமிழும் தழைக்க மணிவிழா ஆண்டு 365 நாளும் தினம் ஒரு திருநூல் வெளியிட்டும், மலிவு விலையில் திருமுறைத் தொகுதிகளைப் பதிப்பித்தும் வருகிறார்கள்.
குருஞானசம்பந்தர் மின் சார்பாக 15 கல்வி நிறுவனங்கள் இருந்ததை 42 கல்வி ஆலயமாக பெருக்கி 20000 மாணவர்களுக்கு இளமையில் கல்வி என்ற இலக்கை ஈடேற்றி வருகின்றார்கள். விஞ்ஞானம் வளர்க்க கலைக் கல்லூரியும், கலைஞானம் பரவ இசைக்கல்லூரியும், மெய்ஞானம் போதிக்க சைவசித்தாந்த மலைநேரக்கல்லூரி 16 மையங்களும் உயர்சிவஞானம் புரக்க வேதசிவாகம, தேவார பாடசாலைகள் நவீன வசதிகளுடன், புதியகட்டிடம் கட்டி நடத்தி வருகிறார்கள், நவீன வலைதள ஊடகத்தின் வாயிலாக ஆதீனத்தின் அளப்பெரும்பணிகள் அயலுலகு அறியவும் பயனுறவும் புதுமை பல செய்து நாளிதழ்களில் இடம் பெறாத நாளில்லை என்று நாளும் சரித்திரம் படைத்து வருகிறார்கள்.
கோ.கெஜ,ஒட்டக, அசுவ, அஜ சாலை அமைத்தும் வாயுறை அளித்தும் ஜீவராசிகள் வாழ வகை செய்துள்ளார்கள். லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள். மாசிலா உரச்சாலை, சிறுகுறுதொழில் சாலை, மங்கலப்பொருள் தயாரிப்புச் சாலை, சந்தை முறை பண்டகசாலை, இயற்கை மருத்துவசாலை, யோகசாலை, பசிப்பிணி போக்கும் பாகசாலை (ரூ 10 உணவுச்சாலை). கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் ஒருபுறம் மருத்துவ சேவையும் மறுபுறம் மூன்று உத்தம பட்ச யாகசாலையோடு வைத்தியநாதர் கும்பாபிரேகமும் செய்து கொரோனா நோய் அகல, உயிர்கள் வாழ பிரார்த்தித்து இன்று வரை அடிப்பிரதட்சணம் செய்பவர்கள்.
பேரிடர் காலத்தில் சந்நியாசி நிலையிலிருந்து களமிறங்கி சமூகப்பணியாற்றியதை யார் தாம் மறப்பர்.தடை வென்று சிவிகாரோகணம் செய்து தனிப்பெரும் சைவ பேரரசராக திகழும் ஸ்ரீலஸ்ரீ 27 ஆவது கயிலை குருமணிகளின் மணிவிழாவினை முன்னிட்டு 01.11.2025 முதல் 10.11.2025 வரை கலை இலக்கிய கருத்தரங்க மாநாடு நடைபெற உள்ளது. 32 தானங்கள் முதல் நலத்திட்டங்கள் பல நல்கி அருளிட உள்ளார்கள். மற்றும் 6.11.2025 முதல் 10.11.2025 வரை சொக்கநாதர், குருமுதல்வர், 27ஆவது குருமணிகள் ஆகிய குரு லிங்க சங்கம மூர்த்திகளுக்கு 8 கால யாகபூஜைகளும் நடைபெற்று விசுவாவசு வருடம் ஐப்பசித் திங்கள்-24 புனர்பூசத் திருநாள் 10.11.2025 மணிவிழா அன்று மகாஅபி'ேகமும், கனகாபிஷேகமும் நடைபெறவுள்ளன.
குறிப்பாக உலகெங்கும் வாழும் சைவச்சிறார்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விழுமியம் என்பவற்றின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு, அச்சுவேலி உழவிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், அச்சுவேலி சிவாகமஞானபானு சிவஸ்ரீ ச குமாரசாமி குருக்கள் அவர்கள் நினைவு அறக்கட்டளை, பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கம் என்பன இணைந்து நடாத்தும் அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்ப தெய்வீக திருவரங்கு சுவாமி அவர்களின் வழிகாட்டல்களுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM