திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ஆரவ்

01 Nov, 2025 | 03:35 PM
image

'பிக் பொஸ்' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடத்தில் அறிமுகமானவர் நடிகர் ஆரவ். அதனைத் தொடர்ந்து 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியான வெற்றியை பெறாததால் தொடர்ந்து வாய்ப்புகள் ஏதுமின்றி.. பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்க தொடங்கினார்.

அதன் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான' கலக தலைவன்' எனும் படத்தின் மூலம் வில்லனாக நடித்து, ரசிகர்களிடத்தில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்திலும் நடித்து தன் மீது புகழ் வெளிச்சத்தை பரவ செய்தார்.

இந்நிலையில் புது இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சொந்தமாக ஆரவ் ஸ்டுடியோஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவருடைய பிறந்த நாளன்று அறிவித்திருக்கிறார். இந்த ஆரவ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் போக்கு அதிகரித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்