நடிகர் மைம் கோபி நடிக்கும் ' ஃப்ரைடே' படத்தின் டீசர் வெளியீடு

01 Nov, 2025 | 03:33 PM
image

புதுமுக நடிகர் அனீஸ் மாசிலாமணி - தீனா - மைம் கோபி - ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ஃபிரைடே' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃப்ரைடே' எனும் திரைப்படத்தில் தீனா, மைம் கோபி அனீஸ் மாசிலாமணி, ராம்'ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தூமா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தக்தம் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் அனீஸ் மாசிலாமணி தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் வடசென்னை பின்னணியில் இயங்கும் கேங்ஸ்டர்களின் வாழ்வியலை பற்றிய படைப்பாக இருக்கும் என காட்சிகள் உறுதிப்படுத்துவதால் ரசிகர்களிடத்தில் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்