நடிகர் அர்ஜுன் அசோகன் நடிக்கும் 'சத்தாபச்சா : தி ரிங்ஸ் ஆஃப் ரவுடிஸ்' படத்தின் டீசர் வெளியீடு

01 Nov, 2025 | 03:10 PM
image

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் 'ப்ரோ கோட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் அசோகன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சத்தாபச்சா : தி ரிங்ஸ் ஆப் ரவுடிஸ்' எனும் பான் இந்திய திரைப்படத்தின் தமிழ் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாள இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் உருவாகும் உருவாகி வரும் 'சத்தாபச்சா : தி ரிங்ஸ் ஆப் ரவுடிஸ்' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், ரோஷன் மேத்யூ, விசாக் நாயர், இசான் சவுகத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சங்கர் ஈசான் எலாய் மற்றும் முஜீப் மஜித் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் முதன்முறையாக பொழுதுபோக்கை மையப்படுத்திய மல்யுத்த விளையாட்டை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் வேர்ல்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சீஹான் சௌகத் மற்றும் ரித்தீஷ் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீசருக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right