முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன தொழில் நுட்பம்

01 Nov, 2025 | 03:03 PM
image

இன்றும் எம்மில் பலரும் முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் அங்கு சத்திர சிகிச்சை செய்து கொள்வதை இயன்றவரை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.

ஏனெனில் இது தொடர்பாக அவர்களுடைய மனதில் ஆழமான அச்சங்கள் உள்ளது. இந்த அச்சத்தை அகற்றும் வகையில் தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகிறது.

இந்நிலையில் தண்டுவட பாதிப்பிற்கும், முதுகெலும்பு பாதிப்பிற்கும் நிவாரணமளிக்கும் சத்திர சிகிச்சையில் புதிதாக ஓ -ஆர்ம் ( O-  Arm) எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய தொழில்நுட்பத்தின் பாவனை குறித்து வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், '' பொதுவாக எம்முடைய முதுகெலும்பில் எலும்புகளும், தண்டுவட நரம்புகளும் அமைய பெற்றுள்ளன.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டால் தாங்க முடியாத வலியும், தண்டுவட நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் நாளாந்த கடமைகளை பாதிக்கும் அளவிற்கு செயலற்ற நிலையும் உண்டாகும்.

இதன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்புடனுனான சத்திர சிகிச்சை மற்றும் அத்துடன் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத நிலை ... இவை இரண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்காக தற்போது மைக்ரோஸ்கோப் - எண்டோஸ்கோப் - நேவிகேஷன் - நியூரோமானிட்டரிங்- றொபாடிக்- என பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது. இதனுடைய அடுத்த கட்டமாக தற்போது ஓ -ஆர்ம் எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் குறித்து சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் இது சி டி ஸ்கேனுடன் பொருத்தப்பட்ட நவீன சத்திர சிகிச்சை தொழில்நுட்பம் என குறிப்பிடலாம்.

அதாவது சத்திர சிகிச்சை கூடத்திலேயே சி டி ஸ்கேன் பொருத்தப்பட்டு, அதனூடாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சை என்றும் குறிப்பிடலாம்.

ஓ -ஆர்ம் எனப்படும் அளவில் பெரியதான கருவி ஒன்றில் நோயாளியை இடம்பெறச் செய்து அந்த கருவி பாதிக்கப்பட்ட இடத்தை துல்லியமாக புகைப்படங்களாகவும், விடியோவாகவும் காட்சிப்படுத்தும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை துல்லியமாக அவதானித்து, அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.‌ இதனால் நோயாளிகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் விரைவாக பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறுகிறார்கள்.

வைத்தியர் பாலமுரளி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக...

2025-11-07 18:22:58
news-image

குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம்...

2025-11-06 16:55:26
news-image

டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான...

2025-11-04 18:18:49
news-image

மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய...

2025-11-03 17:30:29
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-01 15:03:10
news-image

செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும்...

2025-10-31 18:09:47
news-image

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தண்ணீர் பருகுவதில்...

2025-10-30 18:09:24
news-image

எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பையகப் பாதிப்பிற்குரிய அறிகுறிகள்...

2025-10-29 18:16:57
news-image

சர்க்கரை நோய்க்கும், இதய பாதிப்பிற்கும் உள்ள...

2025-10-28 17:08:30
news-image

லிம்போபுரோலிஃபெரேடிவ் டிஸார்டர் எனும் நிணநீர் மண்டல...

2025-10-27 15:17:25
news-image

ஒவ்வாமை பாதிப்பிற்குரிய நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

2025-10-25 18:25:43
news-image

கம்பார்ட்மெண்ட் சிண்ட்ரோம் எனும் தசை பாதிப்பிற்குரிய...

2025-10-24 14:54:30