எம்மில் பலரும் திருப்பி செலுத்த இயலாத கடன் சுமை காரணமாக மன அழுத்தத்துடன் வாழ்வினை நடத்தி வருகிறார்கள். வேறு சிலர் கடனை திருப்பி செலுத்துவதற்கான மனம் இருந்தும் அதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல் காரணமாக 'விதி விட்ட வழி' என்று விதி மீது பழியை போட்டுவிட்டு தங்களின் நாளாந்த கடமைகளை மட்டுமே மேற்கொள்கிறார்கள்.
ஆனால் பொருத்தமான வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வேறு சிலர் பணம் தங்கு தடை இன்றி வருவதற்கான விடயங்களில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அவர்களாலும் எந்த வழிமுறையையும் முழுமையாக நம்பிக்கையுடன் பின்பற்றுவதில்லை. இத்தகைய நிலையில் தடுமாறும் மக்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்..
இதற்கு தேவையான பொருட்கள் : சதுரமாக உள்ள சிவப்பு வண்ணத்திலான துணி, ஏலக்காய், சேமிப்பு பெட்டி.
நீங்கள் காலையில் எழுந்து நீராடிய பிறகு பூஜை அறையில் இறைவனை வணங்குவதற்கு முன் மூன்று ஏலக்காய்களை இறைவன் முன் சமர்ப்பித்து விட்டு, அந்த மூன்று ஏலக்காய்களையும் உங்களுடைய வலது உள்ளங்கையில் வைத்து எம்முடைய பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, தனவரவு தங்கு தடையின்றி வரவேண்டும் என ஒரு முகமான பிரார்த்தனையை செய்துவிட்டு, அதனை ஒரு பிரத்யேக சேமிப்பு பெட்டியில் போட்டு விட வேண்டும்.
இதே போன்ற பிரார்த்தனையை தொடர்ந்து 11 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். 11 நாட்களுக்குப் பிறகு உங்களுடைய சேமிப்பு பெட்டியில் சேகரமாகி இருக்கும் 33 ஏலக்காயை சிவப்பு வண்ண துணியில் முடிச்சிட்டு நீங்கள் உபயோகிக்கும் பணப் பெட்டியில் அதனை வைத்து விட வேண்டும். சரியாக மூன்று மாதம் கழித்து உங்களுடைய பணப் பெட்டியில் வைத்திருக்கும் அந்த முடிச்சினை அருகே ஓடும் நதியில் விட்டு விட வேண்டும்.
பிறகு மீண்டும் 11 நாட்கள் தொடர்ந்து இதே பிரார்த்தனையை செய்து, இதே வழிமுறையை நீங்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது உங்கள் மீது இந்த பிறவியில் சூழ்ந்திருக்கும் மாய தடைகள் மற்றும் சூட்சம தடைகள் அனைத்தும் விலகி, இறைவனின் அருளால் தன வரவு அதிகரித்து, கடன் சுமையிலிருந்து விலகி மன மகிழ்ச்சியுடன் வாழ்வினை எதிர் கொள்வீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM