நாச்சிக்குடா கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 5 மீன்பிடி வலைகள் 17 வெடிபொருட்கள், 17 வெடிநூல் துண்டுகள், 8 நீர் மூழ்கி முகமூடிகள், 8 நீர் மூழ்கி பாதணிகள் மற்றும் 8 ஜீ.பி.எஸ் இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் மீன் பிடிக்காக பயன்படுத்திய 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேர் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விடத்தல்தீவு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.