இன்றைய சூழலில் திருமணமான தம்பதிகள் மகப்பேற்றின்மை பாதிப்பினை எதிர்கொள்கிறார்கள். இதற்கு ஆண்களும் கணிசமான அளவிற்கு காரணமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு நவீன மருத்துவ தொழில்நுட்பம் அறிமுகமாகி தம்பதிகளுக்கு பலன் அளித்து வருகிறது. அந்த வகையில் டி என் ஏ ஃபிராக்மென்டேசன் இன்டெக்ஸ் டெஸ்ட் எனும் உயிரணு அமைப்பியல் பரிசோதனை எனும் நவீன மருத்துவ பரிசோதனை அறிமுகமாகி இருக்கிறது.
இந்த பரிசோதனையில் விந்தணுவின் குரோமோசோம்கள் எனப்படும் மரபணு அதன் தலைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. விந்து உருவாகும் போது அதன் செயல்பாட்டில் மரபணு ஒன்றிணைந்து ஒரு குரோமோசோமை உருவாக்குகிறது.
இந்த செயல்முறையில் ஏதேனும் பாதிப்போ பழுதோ ஏற்பட்டால்.. அது உயிரணுக்கான அமைப்பியலில் சேதத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாக கருத்தரித்தல் நிகழாமல் தம்பதிகளுக்கு தோல்வியை தருகிறது.
இத்தகைய தருணத்தில் ஆண்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயிரணுக்களில் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பரிசோதனையின் போது உயிரணுக்களின் இயக்கம் - செறிவு- உருவ அமைப்பியல் - ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஆய்வகத்தில் உயிரணு குரோமாட்டின் சிதறல் எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிரணுக்களை பிரத்யேகமாக பரிசோதிக்கிறார்கள்.
அத்துடன் கருவுறுதலை உறுதி செய்யும் ஆரோக்கியமான உயிரணுக்களை தெரிவு செய்து, இத்தகைய சிகிச்சையில் வெற்றி வீதத்தை மேம்படுத்துகிறார்கள்.
வைத்தியர் கீதா ஹரிப்பிரியா தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM