இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தோட்டம் ஒன்றில் உடலுறவு கொண்டிருந்த ஜோடியை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சௌத் யார்க்ஷையர் என்ற பகுதியை சேர்ந்த அதிரன் போக்மோர் என்பவர் இரண்டு விமானிகளுடன் ஹெலிகொப்டரில் சுற்றி கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் தோட்டத்தில் ஒரு தம்பதியினர் உடலுறவு கொண்டிருந்தனர். உடனே தனது கெமராவில் வீடியோ எடுத்துள்ளார்.

இதேபோல் இன்னுமொரு வீட்டில் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவரையும்  வீடியோ எடுத்தார்.

இதுகுறித்த தகவல் வெளியே வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சென்ற ஹெலிகொப்டரின் விமானிகளும் கைது செய்யப்பட்டனர்.