காணி மீதான தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக வழிபாடு

31 Oct, 2025 | 04:11 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது மாத ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி கற்கவோ அல்லது திருமணம் செய்யவோ கூடுதல் நிதி தேவைப்படும்.

இத்தகைய தருணங்களில் பயன்படும் என்ற காரணத்தினால் எம்முடைய முன்னோர்கள் அரும்பாடு பட்டு சேகரித்து வைத்திருக்கும் காணியை விற்பனை செய்வதற்கு தயாராவார்கள். 

ஆனால் நினைத்தபடி காணியை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ இயலாத சூழல் உண்டாகும். வேறு சிலருக்கு விற்பனைக்கான தொகை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே இருக்கும். 

இந்நிலையில் நினைத்த வகையில் காணியை விற்பனை செய்து அதனூடாக கிடைக்கும் தொகையை வைத்து எம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை செய்திட வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு சொந்தமான காணியில் உள்ள மண்ணை பிடி அளவு எடுத்து, அதனை ஒரு கோப்பையில் உள்ள தண்ணீரில் கலந்திட வேண்டும். அதன் பிறகு அதனை மண் பிள்ளையாராக பிடித்து, ஒரு வெற்றிலை மீது வைத்திட வேண்டும்.

அதற்கு செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபாடு செய்தால்... உங்களுடைய காணி நீங்கள் நினைத்த வகையில் விற்பனைக்கு தயாராகும். 

தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது உங்களுடைய காணி நீங்கள் எதிர்பார்த்து தொகைக்கு விற்கும் தருணம் வரும் வரையிலோ இத்தகைய வழிபாட்டை தொடர வேண்டும். 

உங்களுடைய பூர்வீக காணி அல்லது விற்பனைக்குரிய காணியிலிருக்கும் மண்ணை மதித்து, முழுமுதற் கடவுளாக வடித்து, வணங்கினால் உங்களுடைய காணி விற்பனையாவதுடன் அதன் மீது உள்ள தோஷங்கள் அனைத்தும் மறைந்து, வீட்டில் சுப காரியம் சுபமாக நடந்தேறும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28