ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி பொதுஇடங்களில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பிரதேசத்தில் பெண்கள் குளிப்பதை ட்ரோன் கமெரா மூலம் வீடியோ எடுப்பதை இளைஞன் ஒருவர் அவதானித்த நிலையில் வென்னப்புவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து இணையத்தளங்களில் பகிரப்படுவதாக சந்தேகிக்கும் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.