பிரித்தானியாவிலுள்ள இலங்கை வைத்தியர்களை நாடு திரும்பக் கோரிய சுகாதார அமைச்சர்

31 Oct, 2025 | 01:32 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் அண்மையில் மேற்கொண்ட பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமூக வலைத்தள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தக் கலந்துரையாடலின்போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள எமது விசேட வைத்திய நிபுணர்களை, நாடு திரும்புவது குறித்துப் பரிசீலிக்குமாறு ஒரு விசேட வேண்டுகோளை விடுத்தேன். எமது சுகாதார சேவையில் தற்போது விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

அவர்கள் இலங்கைக்குத் திரும்பிப் பணியாற்றினால், அவர்களின் அனைத்து முந்தைய சேவைப் பலன்களுடன் சேர்த்து அதே பதவிகளில் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54
news-image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப்...

2026-03-10 14:20:19
news-image

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளுக்கு 16...

2026-03-10 14:41:43
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

2026-03-10 14:16:30