தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

31 Oct, 2025 | 01:12 PM
image

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று வியாழக்கிழமை (30) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47