கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் வைத்து 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒருவகையான போதைதருவிக்கும் 2000 மாத்திரைகளுடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கருகில் மோட்டார் சைக்கிளில் குறித்த சந்தேக நபர் 20 கிலோகிராம் கஞ்சா மற்றும் 2000 போதை மாத்திரைகளுடன் சென்று கொண்டிருந்த போதே பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 30 வயது நிரம்பியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.