எம்மில் பலரும் உயர்கல்வி கற்று வாழ்வாதாரத்திற்காக புலம் பெயர்ந்து அயல் தேசங்களில் கடினமாக உழைத்து வருவார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவை எட்டியவுடன் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி, தான தர்மம் செய்ய திட்டமிடுவர்.
இதற்காக தாயகத்தில் கஷ்டப்படுபவர்களின் பட்டியலை உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ பெற்று அதில் யாருக்கு உதவி செய்தால் பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவு செய்து அவர்களுக்கு உதவிடுவர். இவர்களின் இந்த அற செயல் பலரால் எதிர்மறையாக விமர்சிக்கப்படும். அத்தகைய தருணங்களில் இவர்கள் மனதளவில் சோர்வடைவார்கள்.
இதன் காரணத்தினாலேயே எம்மில் பலரும் கஷ்டப்படும் மக்களுக்கு நேரடியாக உதவுவதை விட.. அவர்கள் தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் ஆலயங்களுக்கு நன்கொடை வழங்குகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற சில சூட்சமமான வழிபாட்டினை தொடர்கிறார்கள். அது தொடர்பாக அவர்களிடம் கேட்கும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விடயங்களை தொடர்ந்து காண்போம்.
நாங்கள் இருக்கும் இடத்தில் தொடர் வெற்றிகளை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்.. யாருடைய எதிர்மறை எண்ணங்களும் எங்களை தாக்காது இருக்க எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வழிபடுகிறோம். அதிலும் குறிப்பாக நாளாந்தம் ராகு கால வேளையில் துர்க்கை அம்மனை துதிக்கிறோம்.
அந்தத் தருணத்தில் ஒன்பது எலுமிச்சம் பழங்களில் சாற்றை அகற்றி அதனை விளக்காக மாற்றி அமைத்து அதில் பசு நெய்யை ஊற்றி தீபமேற்றி வழிபடுகிறோம். அன்றைய தினத்தில் ஏதேனும் ஒரு நிவேதனத்தை ( ஒரு கோப்பை பசும்பால் அல்லது ஒரு கோப்பை குடிநீர் அல்லது ஏதேனும் சிறிதளவு இனிப்பு இவற்றை நிவேதனமாக) படைத்து வழிபட தொடங்குகிறோம்.
அந்த தருணத்தில் ' ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் துர்க்கையாய நமஹ' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கிறோம். இந்த வழிபாட்டை எங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை தொடர்ந்து மேற்கொள்கிறோம் என்றனர்.
இது தொடர்பாக ஆன்மீக நிபுணர்கள் விவரிக்கையில், '' இந்த உலகில் படைத்தல் -காத்தல்- அளித்தல்- ஆகிய மூன்று பணிகளையும் மும்மூர்த்திகள் செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த அரிய முப்பணியையும் ராகு கால தருணத்தில் மேற்கொள்பவள் துர்க்கை. அதனால் தான் ராகு கால தருணத்தில் துர்க்கை வழிபாட்டை மேற்கொண்டவர்கள் தோல்வியே சந்திப்பதில்லை. தொடர் வெற்றிகளை மட்டுமே பெறுகிறார்கள். '' என குறிப்பிடுகிறார்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM