இன்றைய சூழலில் எம்மில் பெரும்பாலானவர்கள் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அலுவலகத்திலும், பணியிட சூழலிலும் பணியாற்றுவதால் போதுமான அளவிற்கும் குறைவாகவே குடிநீரை அருந்துகிறார்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த தருணத்தில் இதய பாதிப்பு அல்லது இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்ட நோயாளிகள் வைத்தியர்களை சந்திக்கும் போது, 'இதய பாதிப்பை எதிர்கொண்டவர்கள் அருந்தும் தண்ணீரில் கட்டுப்பாடு வேண்டும் ' என இணையத்தில் தகவல்கள் வெளியானது. அது உண்மையா?' என வினாவை எழுப்புவார்கள். இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
மாரடைப்பு, நெஞ்சு வலி, இதய செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர் கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் தண்ணீரை பருகுவதில் கட்டுப்பாடு குறித்து எந்தவித பொதுத்தன்மையான அறிவுறுத்தல்களை வழங்குவதில்லை. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம் என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அத்துடன் இதய பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களும் தாகம் எடுத்தாலும் எடுக்கவில்லை என்றாலும் நாளாந்தம் பருக வேண்டிய நீரின் அளவை குறைக்காமல் பருக வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.
அதே தருணத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமாகி, அதன் காரணமாக உடல் உறுப்புகளில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே சில பரிசோதனைகளுக்கு பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து நீர் வெளியேற்றும் அளவு சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு தண்ணீர் அருந்துவதில் கட்டுப்பாடு வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய பரிந்துரை மிக மிக சிலருக்கு மட்டுமே வழங்கப்படும். அதே தருணத்தில் இதய பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் இது பொருத்தமானதல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வைத்தியர் முரளிதரன்
தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM