எம். ஐ. எம். நளீம் ஹாஜியார் அவர்களால் நிறுவப்பட்ட பைரஹா, 1975 ஆம் ஆண்டில் தனியொரு பண்ணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. பைரஹா, இலங்கையின் முதலாவது பாரிய அளவிலான, தரமான பிரொய்லர் கோழி (Broiler Chicken) உற்பத்தியாளர் ஆகும்.
ஆரம்பத்தில் 1985 இல் கம்பஹா மாவட்டத்திலும், பின்னர் புத்தளம், குருநாகல் மற் றும் வேறு சில மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற விவசாயிகளை வலுவூட்டு வதற்காக 'ஒப்பந்த வளர்ப்புத் திட்டத்தை' (Contract Growing Scheme) அறிமுகப்ப டுத்தியது. இலங்கையின் மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் நம்பகமான கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Bairaha Farms PLC நாட்டின் போசாக்குத் களத்தை மறுவடிவமைப்பதில் அதன் 50 ஆண்டுகால சிறப்பையும் தலைமைத் துவத்தையும் பெருமையுடன் கொண்டாடுகிறது.
1975 ஆம் ஆண்டில் பைரஹா தனது செயற்பாடுகளை தொடங்கியபோது, இலங்கை யரின் உணவு மேசையில் கோழியிறைச்சி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்பட்டது.
ஆனால், ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர், நாட்டின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மலிவான புரத மூலமாக கோழியிறைச்சியை மாற்றுவதில் பைரஹா ஒரு கருவியாக இருந்துள்ளது. இந்த மாற்றம், தரத்தைப் பேணுவதில் நிறுவனத்தின் நீடித்த அர்ப்பணிப்பையும், உணவுத் தன்னிறைவை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தையும் ஒருங்கே அடிக்கோடிட்டுக் காட்டு கிறது.
எளிமையான பயணத்தை ஆரம்பித்த பைரஹா, தரமான கோழி பதப்ப டுத்தல், பாரிய அளவிலான Parent Broiler கோழி, Broiler கோழிப் பண்ணைகள் மற்றும் கோழிகளுக்கான முதலாவது எலிசா ஆய்வகம் (Eliza Laboratory) ஆகியவற்றை முன்னோடியாக நிறுவியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
இது Parent Broiler கோழியின் இனப்பெருக்கத்திற்கான Grand Parent மற்றும் Parent கோழிப் பண்ணைகள், தீவன உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் நாடு தழுவிய ரீதியில் கோழி உற்பத்திகளை விநியோகித்தல் எனப் பரந்து விரிந்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், நிலையான தரத்தைப் பேணவும், விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவியுள்ளது.
அத்துடன், கிராமப்புற விவசாயிகளுடன் பைரஹா மேற்கொண்டு வரும் வலுவான கூட்டுமுயற்சிகள், அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தவும், நாட்டின் கோழி உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்தவும் துணைபுரிந்துள்ளன.
இன்று, 1,300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த விவசாயிகளின் ஆதரவுடன், பைரஹா நாடு முழுவதும் 13 இடங்களில் இயங்கி வருகிறது. இனப்பெருக்கப் பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகள் முதல் பதப்படுத்தல் மற்றும் விநியோகம் வரையான ஒவ்வொரு பிரிவும் உயர்தரம் மற்றும் செயல்பாட்டுத் தரநிலைகளை கடுமையாக பின்பற்றுகின்றன. இதன் மூலம், பைரஹா உற்பத்திகள் ஒவ்வொரு நாளும் புத்தம் புதியதாகவும் நம்பகத்தன்மையுடனும் சில்லறை விற்பனையாளர்களையும் உறுதிசெய்யப்படுகிறது.
ஒரு பொறுப்புள்ள உணவு உற்பத்தியாளர் என்ற பாரம்பரியத்தை வலுப்படுத்தி, ஐந்து தசாப்த கால நம்பிக்கையைப் பாதுகாத்து போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தேசிய பங்களிப்பை வலுப்படுத்தல் போன்ற பணிகளை நாட்டுமக்களுக்கு வழங்குவதில் மகிழ்சியடைகின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM