லயன் அறைகளில் வசிக்கும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வலுப்படுத்துங்கள் - சஜித்

30 Oct, 2025 | 12:01 PM
image

இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட  உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும். பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் கூடியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

நமது நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60 வீதமான பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். தேயிலைத் தோட்ட காணிகளில் 30 அல்லது 40 வீதமானவையே இவர்களுக்கு உரித்துடையதாக  காணப்படுகின்றன. சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும்  பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன. 

இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட  உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும். பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குங்கள்.

தென்னை கைத்தொழில் தற்போது பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தயவுசெய்து இந்த வரவு - செலவுத் திட்டத்திலாவது இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள் என்று குறிப்பிட்டார். 

அதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கூறுகையில்,

தென்னை கைத்தொழில் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் தென்னைத் தொழில் முயற்சியாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும்போது, மற்றொரு காலத்தில், அதிக விலை காரணமாக நுகர்வோர் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால் பல நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆகையால் இது தொடர்பான புதிய திட்டங்களை, புதிய வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வேண்டுகோள் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03