உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 13 பேர் காயம் !

Published By: Digital Desk 1

30 Oct, 2025 | 10:42 AM
image

இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 8 பேர் வரை காணாமல்போயுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் - பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கௌடியல ஆற்றில், புதன்கிழமை (29) குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.

இந்தவிபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லக்கிம்பூர் மாவட்டத்தின் கைரதியா கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் பரதபூருக்கு படகில் சென்றுக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடும்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08
news-image

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும்...

2026-09-06 12:19:21
news-image

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு:...

2026-09-06 12:14:20
news-image

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர...

2026-09-06 09:44:38