உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டியில் 100 மீற்றர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க வீராங்­கனை டோரி போவி 10.85 வினா­டிகளில் பந்­தய தூரத்தை கடந்து தங்­கப்­ப­தக்­கத்தை தன­தாக்­கினார்.

உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்டி லண்­டனில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதில் நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்­டத்தில் அமெ­ரிக்க வீராங்­கனை டோரி போவி 10.85 வினா­டிகளில் பந்­தய தூரத்தை கடந்து தங்­கப்­ப­தக்­கத்தை தன­தாக்­கினார். அவர் இறுதித் தூரத்தை தாவி இலக்கை கடந்தார். 

ஐவ­ரிகோஸ்ட் வீராங்­கனை மேரி ஜோசி தாலு 10.86 வினா­டிகளில் கடந்து வெள்­ளிப்­ப­தக்­கத்தையும், நெதர்­லாந்து வீராங்­கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினா­டிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.