வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மி­டத்து  புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சரும்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய  பட்­டியல் எம்.பி.யுமான திலக் மாரப்­ப­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை  தீர்­மா­னித்­துள்­ள­தாக   அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. 

வெளி­வி­வ­கார அமைச்சுப் பத­வி­யா­னது நல்­லாட்சி அர­சாங்கம்   உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்சி வசமே இருக்­கி­றது. எனவே  வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இரா­ஜாங்க  அமைச்சர்   திலக் மாரப்­ப­னவே நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவின் பெயரும்  பரி­சீ­ல­னையில் இருப்­ப­தா­கவும்  எனினும் சிரேஷ்­டத்­து­வத்தின் அடிப்­ப­டையில்  திலக் மாரப்­ப­னவே  வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சுப் பதவி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு வழங்­கப்­ப­டு­மாயின் அந்தப் பத­வியில்  அமைச்சர்  கலா­நிதி சரத் அமு­னு­க­மவை அமர்த்­து­வ­தற்கு ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

எனினும்   நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­போது  வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி ஐ.தே.க.விடமே இருக்­க­வேண்டும் என இரண்டு கட்­சி­க­ளுக்குமிடையில் புரிந்­து­ணர்வு காணப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரே புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக  நிய­மிக்­கப்­படும் சாத்­தியம் அதிகம் இருக்­கி­றது.இது­வரை வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை.  எனினும்  தற்­போது பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற அழுத்­தங்கள் கார­ண­மாக குற்­றச்­சாட்­டுக்கள் தொட

ர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டையும் வரை  அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை  இரா­ஜி­னாமா செய்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  

இதே­வேளை  நீதி அமைச்சர்  விஜ­ய­தாஸ ராஜ­ப­க் ஷவின் பெயரும்  வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பரிசீலனையில் உள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும்

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவையே  மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவேண்டும் என்ற  கோரிக்கைகளும் அரசாங்க மட்டத்தில் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.