எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பையகப் பாதிப்பிற்குரிய அறிகுறிகள் ..?

29 Oct, 2025 | 06:16 PM
image

இன்றைய திகதியில் குறைவான வாழ்வாதாரம் கொண்ட திருமணமான தம்பதிகள் தங்களுடைய தாம்பத்திய உறவு குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற்றிருப்பதில்லை.

இதன் காரணமாக திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை என்றால்.... தங்களின் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பதாக அவர்களே கற்பித்துக் கொள்கிறார்கள்.

இதனால் இவர்கள் அருகில் உள்ள வைத்திய சாலையில் பணியாற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்களை தாமதமாக சந்திக்கிறார்கள். இந்நிலையில் கருப்பையகத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகள் குறித்து மகப்பேறு வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

திருமணமான பெண்களுக்கு நாட்பட்ட இடுப்பு வலி, மாதவிடாய் காலங்களில் இயல்பான அளவைவிட கூடுதலான வலி, செரிமானம் சார்ந்த குறைபாடுகள், கருத்தரிப்பதில் சிரமம், தாம்பத்திய உறவிற்கு பிறகான வலி... ஆகிய முதன்மையான அறிகுறிகளுடன் சோர்வு, முதுகு வலி, சிறுநீர் வெளியேற்றுவதில் எரிச்சல் உள்ளிட்ட சிக்கல்கள் ஆகிய அறிகுறிகள் இருந்தால்... உங்களுடைய கருப்பையகத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என அவதானித்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று மகப்பேறு வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும்.

அத்துடன் அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் கருத்தரித்தல் தொடர்பாக வைத்தியர்களிடம் மருத்துவ ரீதியான ஆலோசனையும், உரையாடலையும் மேற்கொண்டால்... இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க இயலும்.‌ இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0754000012 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

வைத்தியர் சம்ஹிதா மொட்டூரி ; தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-25 16:33:02