பெண் ஒருவரின் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க மாலை ஒன்றை கொள்ளையடித்து சென்ற நபரை குருநாகல் அலவ்வ பகுதியில் வைத்து  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அலவ்வ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொல்கஹவெல மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த அலவ்வ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.