ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால்... முதலில் தங்களிடம் எவ்வளவு ரூபாய் இருக்கிறது என்பதைத்தான் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் பணத்தை பிரச்சனைக்கான தீர்வை அளிக்கும் காரணியாகவும் கருதுகிறார்கள்.
அத்துடன் பணம் வங்கியில் இருப்பதைவிட... தனவந்தர்களிடம் இருப்பதை விட... தங்களின் இருப்புகளில் ..தங்களின் கைகளில் ...தங்களின் சேமிப்பு கணக்கில்... எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான் முதன்மையாக பார்க்கிறார்கள்.
இந்நிலையில் சிலருக்கு வரும் என்றும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்றால்.. பதற்றம் அடைகிறார்கள். கவலை அடைகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் தங்கு தடை இன்றி பணம் வருவதற்கான சூட்சும குறிப்புகளை எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : செம்பருத்தி இலை அல்லது மா இலை அல்லது வேப்பிலை அல்லது வெற்றிலை, ஏலக்காய், கிராம்பு.
நீங்கள் தன வரவிற்காக யாரேனும் முக்கிய பிரமுகர்களை சந்திப்பதாக இருந்தாலும் அல்லது பொருளை உண்டாக்கும் வகையினதான சந்திப்பின் போதும் உங்களுடன் செம்பருத்தி இலை- மா இலை - வேப்பிலை -வெற்றிலை - இவற்றில் ஏதேனும் ஒன்றில், இரண்டு ஏலக்காய் மற்றும் மூன்று கிராம்புகளை வைத்து மடித்து எடுத்துச் செல்லுங்கள். இது எப்போதும் உங்களுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனை வைத்துக் கொண்டு நீங்கள் பேச்சு வார்த்தையை தொடங்கினால்.. தன வரவு உறுதியாகும். வரவேண்டிய பணமும் சொன்ன இடத்திலிருந்து துல்லியமாக கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM